வருமான சான்றிதழ் பெறும் எளிய வழிமுறை | TNEGA - Income Certificate | TNEGA How to get Tamil Nadu Government Income Certificate
இதில் நாம் எவ்வாறு தமிழக அரசு வழங்கக்கூடிய வருமானச் சான்றிதழை பெறுவது என்பதை பற்றி பார்க்க போகிறோம். இதற்கு முன்பாக தமிழக அரசால் (TNEGA ) வழங்கக்கூடிய எந்த ஒரு சான்றுதலையும் பெறாமல் இருந்தால் நீங்கள் CAN - Number பெற வேண்டும். அது எப்படி பெறுவது என்பது பற்றி அறிய அருகிலுள்ள லிங்கை கிளிக் செய்யவும். மேலும் இதற்கு User id , Password தேவை அது எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பது பற்றி அறிய அருகில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
இந்தக் கட்டுரையில் ஏதாவது சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால் அதனை INFOWORLD62.CARE@GMAIL.COM - என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். தவறுதலாக எதையும் செய்யாதீர்கள் ! நீங்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் நாங்கள் வழிகாட்டுகிறோம்.
1.நீங்கள் மாணவர் என்றால் (உங்களுக்கு ஊதியம் இல்லை) உங்களுடைய பெயரில் வருமான சான்றிதழ் பெற வேண்டாம். உங்கள் தந்தை பெயரில் விண்ணப்பிக்கவும். குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உங்களுடைய பெயர் இருந்தால் போதும்.
2. மற்றவர்கள் உங்கள் பெயரிலே விண்ணப்பிக்கலாம்.
(விண்ணப்பதாரரின் பெயரில் CAN - எண் , கட்டாயம் இருக்க வேண்டும் )
How to create TNEGA User Id , Password | Click Here |
How to create TNEGA - CAN Number | Click Here |
விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் :
1. புகைப்படம் (Photograph)
2. ஆதார் அட்டை (Aadhar Card for Address Proff)
3. குடும்ப அட்டை (Family Ration Card )
CAN - Number ஏற்கனவே இருந்தால் நீங்கள் கீழ்காணும் வழிமுறையை பின்பற்றி வருமானச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். கீழே உள்ள TNEGA லிங்கை கிளிக் செய்தால் இவ்வாறு ஒரு பக்கம் தோன்றும்.
TNEGA Website link - CLICK HERE
இதில் பயனாளர் உள்நுழைவு என்ற பட்டனை அழுத்தவும். இதனைத் தொடர்ந்து நீங்கள் உருவாக்கிய பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும்.
இதனைத் தொடர்ந்து இவ்வாறு ஒரு பக்கம் தோன்றும், இதில் வருவாய்த்துறை (Revenue Department) என்பதை தேர்வு செய்யவும் ,
அதன் பின் இவ்வாறு ஒரு பக்கம் தோன்றும், இதில் நாம் தற்போது விண்ணப்பிப்பது வருமானச் சான்றிதழ் அதனால் REV - 103 Income Certificate என்பதை கிளிக் செய்யவும்.
இதனைக் தொடர்ந்து நாம் விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் எவையெல்லாம் என்பது பற்றி ஒரு திரை தோன்றும் , ஒருமுறை பார்த்துவிட்டு கீழே உள்ள Proceed என்பதை கிளிக் செய்யவும்.
இதைத் தொடர்ந்து நாம் இந்த பக்கத்தை அடைவோம் இதில் நாம் ஏற்கனவே உருவாக்கிய CAN - Number யை உள்ளிடவும். உங்களிடம் கேன் இல்லை என்றால் அருகில் உள்ள லிங்கை கிளிக் செய்து அதை எவ்வாறு பெறுவது என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
How to create CAN - Number - CLICK HERE
இந்தக் கட்டுரையில் ஏதாவது சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால் அதனை INFOWORLD62.CARE@GMAIL.COM - என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். தவறுதலாக எதையும் செய்யாதீர்கள் ! நீங்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் நாங்கள் வழிகாட்டுகிறோம்.
ஒருவேளை உங்களிடம் இந்த எண் இருந்து அது தற்போது மறந்துவிட்டாள் உங்களுடைய மொபைல் என் மற்றும் ஆதார் எண்ணெய் உள்ளிட்டு கீழே உள்ள Search என்பதை கிளிக் செய்து தொடரவும்.
ஆதார் எண் அல்லது CAN என்னை உள்ளிட்டு அந்த வரிசையின் முதலில் உள்ள சிறிய புள்ளியை கிளிக் செய்தால் நீங்கள் பதிவு செய்த தொலைபேசி Nummber கீழே தோன்றும் , அதனைத் தொடர்ந்து Generate OTP யை கிளிக் செய்து ஓடிபி பதிவிடவும். இதனைத் தொடர்ந்து
Proceed, Edit Can detail, Save as new என்பது தோன்றும் இதில் Proceed என்பதை கிளிக் செய்யவும்.
இதனைத் தொடர்ந்து உங்களுடைய தகவல்களை இதில் உள்ளடவும். இதில் application detail, current address , permanent address ஆகியவை நீங்கள் CAN எண் பதிவிடும்போது கொடுத்த தகவல்கள் அதில் காட்டும்....
கீழ்காணும் தகவல்களை கவனமாக படித்துவிட்டு அதற்கு அடுத்து உள்ள தகவலை உள்ளிடவும்.
1. நீங்கள் மாணவர் என்றால் (உங்களுக்கு ஊதியம் இல்லை) உங்களுடைய பெயரில் வருமான சான்றிதழ் பெற வேண்டாம். உங்கள் தந்தை பெயரில் விண்ணப்பிக்கவும். குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உங்களுடைய பெயர் இருந்தால் போதும்.
2. மற்றவர்கள் உங்கள் பெயரிலே விண்ணப்பிக்கலாம்.
Details of family members என்பதில், உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளடவும்.
EXAMPLE - 3
1. Father
2. Mother
3. Son
நீங்கள் மாணவர் என்றால் , முதலில் உங்களுடைய தந்தை பெயரினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளிட்டு , அவருடைய வயது, பாலினம் மற்றும் ஊதியம் பெறும் வகை ஆகியவற்றை தேர்வு செய்யவும் . Relationship என்பதில் Self என்பதை தேர்வு செய்து கீழே உள்ள பெட்டியில் சரியான ஒன்றய் தேர்வு செய்து உங்களுடைய தந்தை மாத ஊதியத்தை உள்ளிடவும். அருகிலேயே வருட ஊதியமும் தோன்றும் அதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்துக் கொண்டு கீழே உள்ள Add என்பதை கிளிக் செய்து, இதேபோல உங்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களின் தகவல்களையும் உள்ளிடவும்.
குறிப்பு : விண்ணப்பதாரர் உங்களுடைய தந்தை ஆக இருந்தால் family members ல் அடுத்து தாய் (அவருடைய தகவல்கள்), அடுத்து குழந்தை (அவருடைய தகவல்கள்) ஆகியவற்றை உள்ளிட்டு Add என்பதை கிளிக் செய்து இறுதியாக Submit என்பதை கிளிக் செய்யவும்.
இதன்பின் இவ்வாறு ஒரு பக்கம் தோன்றும் இதில் Download application form என்பதை கிளிக் செய்தால் ஒரு PDF பதிவிறக்கம் ஆகும் அதனை Print Out எடுத்துக்கொள்ளுங்கள். அதனை ஒருமுறை படித்துவிட்டு கீழே விண்ணப்பதாரரின் கையப்பத்தை போடவும்.
தற்போது உங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக தேவையான சான்றுதல்களை தெளிவாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அருகில் உள்ள லிங்கை கிளிக் செய்து உங்களுடைய சான்றுதலை அதில் பதிவேற்றம் செய்து தேவையான Image Size ற்கு மாற்றிக் கொள்ளுங்கள் .
இந்தக் கட்டுரையில் ஏதாவது சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால் அதனை INFOWORLD62.CARE@GMAIL.COM - என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். தவறுதலாக எதையும் செய்யாதீர்கள் ! நீங்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் நாங்கள் வழிகாட்டுகிறோம்.
IMAGE UPLOAD SIZE - 50 KB
Image compress link - CLICK HERE
Image Size - 50KM அருகிலுள்ள லிங்கை பயன்படுத்தினால் இவ்வாறு ஒரு தளம் தோன்றும் அதில் தங்களுடைய சான்றுதலை பதிவேற்றிவிட்டு கீழே உள்ள பட்டியல் 50 என்பதை உள்ளிட்டால் உங்களுக்கு தேவையான அளவில் சான்றுகள் பதிவிறக்கம் ஆகும்.
மாற்றிய சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு TNEGA தளத்தில் உள் நுழைந்து ,
1. முதலில் Select Document என்பதில் உங்களுடைய அளவு மாற்றப்பட்ட புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யவும்.
2. அதனைத் தொடர்ந்து Address சான்றிதழாக உங்களுடைய அளவு மாற்றப்பட்ட ஆதார் அட்டை புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும். அருகில் அதனுடைய எண்ணையும் தெளிவாக உள்ளடவும்.
3. அதேபோல அளவு மாற்றப்பட்ட குடும்ப அட்டை மற்றும் நீங்கள் பதிவிறக்கம் செய்து Print Out எடுத்து கையொப்பமிட்டு அளவு மாற்றப்பட்ட புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்யவும்.
(சான்றுகளில் எண் ( Document Number) இருந்தால் மட்டும் அதை அருகில் பதிவேற்றம் செய்தால் போதுமானது) .
அனைத்தும் பதிவேற்றிய பின் Submit என்பதை கிளிக் செய்தால் Payment Page க்கு உள்நுழையும். இதில் வருமானச் சான்றிதழ் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 60 ரூபாயை தங்களுடைய UPI (Gpay, paytm ) Or Debit Or Credit Card பயன்படுத்தி செலுத்தி விட்டு சற்று நேரம் அதே பக்கத்தில் காத்திருந்தால் இறுதியாக ஒரு 'ஒப்புகைச் சீட்டு ' Receipt தோன்றும் அதனை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
விண்ணப்பித்த பிறகு அதிகபட்சம் 10 நாட்களுக்குப் பின் சான்றுதலை பெற்றுக் கொள்ளலாம்
சான்றிதழின் நிலை என்னவென்று அறிய , CLICK HERE
நீங்கள் பதிவிறக்கம் செய்த ஒப்புக்கள் சீட்டு (Receipt) உள்ள சான்றிதழ் என்னை அருகில் உள்ள லிங்கை கிளிக் செய்து உள்ளிட்டால் அதன் நிலையை அறிய முடியும்.
HOW TO CREATE TNEGA User id , Password | CLICK HERE |
HOW TO CREATE CAN NUMBER | CLICK HERE |
HOW TO APPLY COMMUNITY CERTIFICATE | We will update soon..! |
HOW TO APPLY INCOME CERTIFICATE | CLICK HERE |
HOW TO APPLY NATIVITY CERTIFICATE | We will update soon..! |
HOW TO APPLY FIRST GRADUATE CERTIFICATE | We will update soon..! |
HOW TO APPLY PSTM | We will update soon..! |
This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal
________________________________________________________________________________________________________________________________________________
If you have any questions Or feedback in this Article,
Contact Email -INFOWORLD62.CARE@GMAIL.COM
Regards - Info world Tamil
Comments
Post a Comment