TNEGA - (CAN Number) எவ்வாறு பெறுவது ? | How to get TNEGA CAN - Number | CAN Tamil Nadu Government E Government Agencies


CAN - Number எவ்வாறு பெறுவது ?

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து வகையான சான்றிதழ்களை பெறுவதற்காகவும் Can number தேவைப்படுகிறது. ஒவ்வொரு பயனாளர்களுக்கும் தனித்தனியாக இந்த எண் தேவைப்படும். ஒருமுறை இந்த எண் பெற்று விட்டால் அடுத்தடுத்து விண்ணப்பிக்கக்கூடிய அனைத்து சான்றிதழ்களுக்கும் இதையே பயன்படுத்திக் கொள்ளலாம். இது நிரந்தரமான ஒன்றாகும்.

தேவையான தகவல்கள்;     

1. ஆதார் அட்டை.
2. தெளிவான உங்களது வீட்டு முகவரி.
3. Aadhar Re Mobile Phone (For OTP)
4. Some of your basic informations.

இந்தக் கட்டுரையில் ஏதாவது சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால் அதனை INFOWORLD62.CARE@GMAIL.COM - என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். தவறுதலாக எதையும் செய்யாதீர்கள் ! நீங்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் நாங்கள் வழிகாட்டுகிறோம்.

CAN - Number பெறுவதற்கு :
          

கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து , பயனாளர் உள் நுழைவு என்ற பகுதியை கிளிக் செய்து, பயனாளர் உள்நுழை ஐடி மற்றும் கடவுச்சொல்லை (login ID and password)  உள்ளிட்டு சரியான கேட்சாவை பதிவிடவும். ( உங்களிடம் பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் இல்லை என்றால் அருகில் உள்ள லிங்கை பயன்படுத்தி அதனை உருவாக்கவும்  ( CLICK HERE )  




உள் நுழைந்த பிறகு இவ்வாறு  Services என்ற பக்கம் தோன்றும், அதில் நீங்கள் எந்த சான்றுகளை விண்ணப்பிப்பதாக இருந்தாலும் சரி, (Revenue Department) என்பதை கிளிக் செய்து, அதில் ஏதேனும் ஒரு சான்றிதழை தேர்வு செய்யவும். (குறிப்பு: நீங்கள் எந்த சான்றுதலை  விண்ணப்பிப்பதாக இருந்தாலும் பரவாயில்லை, இது வெறும் CAN - Number பெறுவதற்கான செயல்முறையை அதனால் ஏதேனும் ஒரு சான்றிதழை கிளிக் செய்யவும். 



இதனைத் தொடர்ந்து மற்றொரு பக்கத்தில் இவ்வாறு தோன்றும் இதில் Proceed என்பதை கிளிக் செய்யவும், 



இதனைத் தொடர்ந்து இவ்வாறு ஒரு பக்கம் தோன்றும் இதில் Register CAN என்பதை கிளிக் செய்யவும், 




இதனைத் தொடர்ந்து தங்களுடைய சரியான தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிப்படுத்தி  இதில் உள்ளிடவும், முதலில் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணை தெளிவாக உள்ளிடவும், அதனைத் தொடர்ந்து ((Document Type என்பது கட்டாயம் உள்ளிட வேண்டிய தகவல் இல்லை உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதில் உங்களுடைய PAN or Ration or Voter  எண் - ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதன் எண்னை உள்ளிடவும்))

இந்தக் கட்டுரையில் ஏதாவது சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால் அதனை INFOWORLD62.CARE@GMAIL.COM - என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். தவறுதலாக எதையும் செய்யாதீர்கள் ! நீங்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் நாங்கள் வழிகாட்டுகிறோம்.

இதனைத் தொடர்ந்து Application  என்பதில் உங்களது முறையை தேர்வு செய்யவும். 

1. செல்வி - என்பது திருமணம் ஆகாத பள்ளிப் பருவ பெண்ணை குறிப்பிடும்.
2. செல்வன் - என்பது திருமணம் ஆகாத பள்ளிப்பருவ ஆண்களை குறிப்பிடும்.
3. ஸ்ரீ - என்பது திருமணம் ஆகாத ஆண்களை குறிப்பிடும்.
4. ஸ்ரீமதி - என்பதே திருமணம் ஆகாத பெண்களை குறிப்பிடும். 
5. திரு - என்பது திருமணம் ஆன ஆண்களை குறிப்பிடும். 
6. திருமதி - என்பது திருமணம் ஆன பெண்ணை குறிப்பிடும்.

இதில் தங்களுடைய முறை எது என்பதை சரியாக குறிப்பிடவும்., இதனைத் தொடர்ந்து தங்களுடைய பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சான்றுதலில் உள்ளவாறு எவ்வித மாற்றமும் இன்றி உள்ளிடவும். அதனைத் தொடர்ந்து உங்களுடைய பாலினம் மற்றும் திருமண நிலையை உள்ளடவும். உங்களுடைய பிறந்த தேதியை சான்றிதழில் உள்ளபடி (As per Aadhar Card) சரியாக உள்ளடவும். இதனைத் தொடர்ந்து தங்களுடைய உறவு முறையை சரியாக உள்ளிட்டு உங்களுடைய தந்தை மற்றும் தாய் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சான்றிதழ் உள்ளபடி உள்ளிடவும். அதனைத் தொடர்ந்து உங்களுடைய மதம் மற்றும் சாதியை சரியாக உள்ளிடவும். உங்களுடைய சாதி எது என்பதை உங்களுடைய சாதி சான்றிதழில் பார்த்து சரியாக உள்ளடவும் ( குறிப்பு : நீங்கள் சாதிச் சான்றிதழ் விண்ணப்பித்தால் உங்களுடைய தந்தையின் சாதி சான்றிதழில் என்ன சாதி உள்ளதோ அதை பார்த்து உள்ளிடவும்) . அதனைத் தொடர்ந்து உங்களுடைய கல்வி தகுதி மற்றும் வேலை ஆகியவற்றை உள்ளடவும். 

இதனைத் தொடர்ந்து உங்களுடைய தற்போதைய மற்றும் நிலையான வீட்டு முகவரியை உள்ளிடவும். சான்றுகளில் உள்ளவாறு சரியாக பதிவிடவும்.  உங்களுக்கு தற்போதைய முகவரி மற்றும் நிலையான முகவரி ஒன்றாகவே இருந்தால், தற்போதைய முகவரியே உள்ளித்து விட்டு கீழே உள்ள ,  If permanent address same as current address என்பதற்கு அருகில் உள்ள பெட்டியை கிளிக் செய்தால் தற்போதைய முகவரியில் நீங்கள் கொடுத்த தகவல் நிலையான வீட்டு முகவரியாக அதுவே எடுத்துக் கொள்வோம். 

இதனைத் தொடர்ந்து உங்களுடைய மின்னஞ்சல் தொலைபேசி என் ஆகியவற்றை உள்ளிடவும். தொலைபேசி எண் உங்கள் கையில் உள்ளவாறு பார்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் (OTP) தேவைப்படும். 

கீழே உள்ள Generate OTP Option கிளிக் செய்த உங்கள் கைபேசிக்கு வந்த OTP - யை உள்ளிடவும்.

இந்தக் கட்டுரையில் ஏதாவது சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால் அதனை INFOWORLD62.CARE@GMAIL.COM - என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். தவறுதலாக எதையும் செய்யாதீர்கள் ! நீங்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் நாங்கள் வழிகாட்டுகிறோம்.

இதனைத் தொடர்ந்து ரிஜிஸ்டர் என்ற கீழே உள்ள பட்டனை அழுத்தினால் உங்களுடைய பெயர் மற்றும் பிறந்த தேதி ஒருமுறை சரியாக உள்ளதா என்பது  பற்றிய ஒரு திரை தோன்றும். அதை ஒரு மறை உறுதிப்படுத்தினால் உங்களுக்கான CAN - Number  தோன்றும் . அதனை ஸ்கிரீன் ஷாட் (Screen Shot) எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் அல்லது ஏதேனும் காகிதத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணை பயன்படுத்தி நீங்கள் எவ்வகையான சான்றிதழையும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.


HOW TO CREATE TNEGA User id , Password CLICK HERE
HOW TO CREATE CAN NUMBER CLICK HERE
HOW TO APPLY COMMUNITY CERTIFICATE We will update soon..!
HOW TO APPLY INCOME CERTIFICATE CLICK HERE
HOW TO APPLY NATIVITY CERTIFICATE We will update soon..!
HOW TO APPLY FIRST GRADUATE CERTIFICATE We will update soon..!
HOW TO APPLY PSTM We will update soon..!
       


This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal

________________________________________________________________________________________________________________________________________________

If you have any questions Or feedback in this Article,

Contact Email -INFOWORLD62.CARE@GMAIL.COM


Regards  - Info world Tamil

________________________________________________________________________________________________________________________________________________

Comments