தமிழ் (தேர்வு - 16)
1. மழை பெய்தது _________ நான் குடை எடுத்துச் சென்றேன்.
A. ஏனெனில்
B. எனவே
C. எனில்
D. ஆனால்
2. மனிதர்களை நிலவுக்கு அனுப்புவோம் _________ நிலவிற்கு செல்ல தயாராக இருங்கள்.
A. ஏனெனில்
B. ஆகையால்
C. எனில்
D. எனவே
3. அற இலக்கியங்கள் கூறும் கருத்துக்களை வாழ்வில் பின்பற்ற வேண்டும் ________ அவை நம் வாழ்வை வளமாக்கும்.
A. ஏனெனில்
B. அதனால்
C. எனவே
D. ஆகவே
4. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம் _______ மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
A. மேலும்
B. ஏனெனில்
C. இல்லையென்றால்
D. எனவே
5. எனக்கு உடல் நலம் இல்லை _________ நான் பள்ளிக்குச் செல்லவில்லை.
A. ஆயினும்
B. இருப்பினும்
C. அவ்வாறென்றால்
D. அதனால்
6. நேற்று கனமழை பெய்தது ________ குளம் குட்டைகள் நிரம்ப வில்லை.
A. ஆயினும்
B. ஆகையால்
C. எனவே
D. என்றும்
7. அறிவு வளர்ச்சிக்கு கணினி தேவை _______ கணினியை இயக்கத் தெரிந்தல் வேண்டும்.
A. ஆயினும்
B. அப்படியானால்
C. ஆதலால்
D. ஆகவே
8. தீப ஒளி திருநாளில் பட்டாசு அதிகம் வெடித்தனர்_______காற்று மாசு அடைந்தது.
A. அதனால்
B. மேலும்
C. இல்லையென்றால்
D. ஏனெனில்
9. தனக்கான ஆற்றலை சேகரித்து வைக்க மூளைக்கு இடம் இல்லை. ________ அதற்கு குருதியோட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
A. அதனால்
B. ஏனெனில்
C. அதுபோல
D. அதைவிட
10. பிறருக்கு கொடுத்தாலே செல்வத்தின் பயன் ______ பிறருக்கு கொடுத்து மகிழ்வோம்.
A. மேலும்
B. ஆகையால்
C. ஏனெனில்
D. அதனால்