தமிழ் தேர்வு - 15
1. பேச்சு வழக்குச் சொற்களை நீக்கிச் சரியான தொடரைத் தேர்க.
A) உழைக்கிற மாடுதான் ஊருகுள்ள வெல போகும்
B) உழைக்கின்ற மாடுதான் ஊருகுள்ள விலை போகும்
C) உழைக்கின்ற மாடுதான் ஊருகுள்ளே விலை போகும்
D) உழைச்ச மாடுதான் ஊருக்குள்ள வெலை போகும்
2. எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.
A) சோலைக்குள் சத்தமில்லாமல் தென்றலு வீசியது.
B) சோலைக்குள் சத்தமில்லாமல் தென்றல் வீசியது.
C) சோலைக்குள்ளே சத்தமில்லாமல் தென்றலு வீசியது.
D) சோலையிலே சத்தமில்லாமல் தென்றலு வீசியது.
3. பேச்சு வழக்கு எழுத்து வழக்கு ((பேருந்து நிலையம் அருகாமையில் வளவன் பால் குடித்துக் கொண்டிருந்தான்.))
A) பேருந்துநிலையம் அருகாமையில் வளவன் பால் பருகிக் கொண்டிருந்தான்
B) பேருந்து நிலையம் அருகில் வளவன் பால் குடித்துக் கொண்டிருந்தான்.
C) பேருந்து நிலையம் அருகில் வளவன் பால் பருகிக் கொண்டிருந்தான்.
D) பேருந்து நிலையம் அருகே வளவன் பால் குடித்துக் கொண்டிருந்தான்.
4. பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக.
A) அவம் பாட்டியோட வெளியூர் போயிருக்கான்.
B) அவன் பாட்டியுடன் வெளியூர் போயிருக்கான்.
C) அவன் பாட்டியோட வெளியூர் போயிருக்கிறான்.
D) அவன் பாட்டியோடு வெளியூர் போயிருக்கிறான்.
5. எழுத்து வழக்காக மாற்றுக. ((ரொம்பத் தொலவட்லயிருந்து வர்ரென்.))
A) மிகுந்த தொலைவிலிருந்து வருகிறேன்.
B) மிகுதியான தூரத்திலிருந்து வருகிறேன்.
C) நீண்ட தொலைவிலிருந்து வருகிறேன்.
D) நீண்ட தூரத்திலிருந்து வருகிறேன்.
6. சொற்களை இணைத்தும் புதிய சொல் உருவாக்குக : குட்டி
A) அலை
B) வீடு
C) சுவர்
D) மலை
7. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக : கால
A) வாகனம்
B) மணி
C) நிமிடம்
D) சூழல்
8. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக.
A) கோல் – மீன்
B) வெளிய – மீன்
C) விண் – மீன்
D) எழுது – கண்
9. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக : சாவி
A) கற்றை
B) கூட்டம்
C) குலை
D) கொத்து
10. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக : கீரி
A) பிள்ளை
B) குஞ்சு
C) கன்று
D) குட்டி