தமிழ் தேர்வு - 14
1. கீழ்காணும் தொடரில் “ஒரு” , “ஓர்” - சரியாக அமைந்த தொடர் எது ?
A. ஒரு ஊர்
B. ஓர் ஊர்
C. ஓர் பழைய ஊர்
D. ஒரு இனிய ஊர்
2. பிழையற்ற தொடரைக் கண்டறிக.
A. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது
B. ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
C. ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது
D. ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குலம் இருந்தது
3. பிழையற்ற தொடரைக் கண்டறிக.
A. ஒரு நாள் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்
B. ஓர் நாள் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தது
C. ஒரு நாள் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தன
D. ஓர் நாள் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்
4. பிழையற்ற தொடரைக் கண்டறிக.
A. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் ஓர் இலக்கியம் சிலப்பதிகாரம்
B. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் ஒரு இலக்கியம் சிலப்பதிகாரம்
C. தமிழ் இனத்தால் ஒன்றுபடுத்தும் ஒரு இலக்கியம் சிலப்பதிகாரம்
D. தமிழ் இனத்தால் ஒன்றுபடுத்தும் ஓர் இலக்கியம் சிலப்பதிகாரம்
5. பிழையற்ற தொடரை கண்டறிக.
A. ஒரு அழகிய ஊஞ்சல் ஆடுகிறது
B. ஓர் ஊஞ்சல் ஆடுகிறது
C. ஒரு ஊஞ்சல் ஆடுகிறது
D. ஓர் மர ஊஞ்சல் ஆடுகிறது
6. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக “குடுத்துடு”
A. கொடு
B. குடுத்துவிடு
C. குடித்து விடு
D. கொடுத்துவிடு
7. கீழ்க்கண்டவற்றுள் பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு சொற்களை கண்டறிக
A. வருவியா ? – வந்ததா ?
B. வந்தாய் – வருவாய்
C. வந்தியா ? – வந்தாயா ?
D. வருகிறாய் – வருவாய்
8. பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு
A. காக்கா – காக்கை
B. காக்கா – கானகம்
C. காக்கா – கரையும்
D. காக்கா – கறையும்
9. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக. “வவுத்து வலி”
A. வறுத்து வலி
B. வயற்று வலி
C. வயிற்று வலி
D. வயிறு வலி
10. பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு “எண்ணை”
A. என்னை
B. எண்நெய்
C. எண்ணெய்
D. எண்ணிக்கை