பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற கெடு !


இந்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஐந்து முக்கிய முடிவுகள் !

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். அதே போல இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியாவின் முப்படை பாதுகாப்பு ஆலோசக அதிகாரிகள் திரும்பப் பெறப்படுவர்.


மே 1 முதல் இரண்டு நாட்டு தூதரகங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை 55-ல் இருந்து 30 ஆக குறைக்கப்படுகிறது. இது மேலும் குறைக்கப்படும்.



சார்க் (SAARC) விசா விதிகளின் படி இந்தியாவுக்கு வர பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இந்த விசா விதிகளின் கீழ் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.


இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தண்ணீர் விநியோக ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. எல்லைக்கு அப்பால் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் கட்டுப்படுத்தும் வரை இந்த ரத்து அமலில் இருக்கும்.


இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒருங்கிணைந்த அட்டாரி எல்லை உடனடியாக மூடப்படுகிறது. இந்த எல்லையை கடந்து சென்றவர்கள் மே 1-ம் தேதிக்குள் திரும்ப வேண்டும்




#india #pakistan #sindhu #sindhuriver #IndusWatersTreaty #pakistanembassy #attari #attaribarder #attaribarderclose 


Comments