TNPSC ஒலி வேறுபாடு | Group 1,2,2A,4
ஒலி வேறுபாடு |
1.மயங்கொலி
எழுத்துக்கள் :
➽ ண, ன, ந
➽ ல, ள, ழ
➽ ல, ள, ழ
2. சொற்களில் "ண, ன" இடம் பெறும் முறைகள் ;
1. ண - ட,ண (டண்ணகரம்)
( ட - என்னும் எழுத்துக்குமுன் ண - எனும் எழுத்து வரும்)
எகா : கண்டம்.
2. ன - றன (றன்னகரம்).
(ற -எனும் எழுத்துக்கு முன் ன -எனும் எழுத்து வரும்)
எ.கா : மன்றம்
School Book Based :
1 | வாணம் | வெடி |
2 | வானம் | ஆகாயம் |
3 | பணி | வேலை |
4 | பனி | குளிர்ச்சி |
5 | விலை | பொருளின் மதிப்பு. |
6 | விளை | உண்டாக்குதல் |
7 | விழை | விருப்பம் |
8 | இலை | செடி |
9 | இளை | மெலிந்து போதல் |
10 | இழை | நூல் இழை |
11 | ஏரி | குளக்கரை |
12 | ஏறி | ஏறினர் |
13 | கூரை | வீட்டின் கூரை |
14 | கூறை | புடவை |
15 | பரவை | கடல் |
16 | பறவை | பறப்பத |
17 | மணம் | நறுமணம் |
18 | மனம் | உள்ளம் |
Extra words :
S.N | ||
---|---|---|
19 | தேனீர் | தேன் |
20 | தேநீர் | தேயிலை (Tea) |
21 | தழை | இலை |
22 | தளை | பிணைப்பு |
23 | தலை | உடலின் ஒரு உறுப்பு |
24 | சூழ் | சூழ்ந்து கொள் |
25 | சூள் | ஆணை |
26 | சூல் | கரு |
27 | அலை | கடலின் அலை |
28 | அளை | கறையான் புற்று, அளைதல் |
29 | அழை | அழைத்தல் |
30 | இலை | மர இலை |
31 | இளை | இளைத்தல் |
32 | இழை | இழையோடுதல் |
33 | வலி | நோவு (Pain) |
34 | வளி | காற்று |
35 | வழி | பாதை |
36 | அழகு | வனப்பு |
37 | அளகு | பெண் பறவை |
38 | அலகு | பறவையின் மூக்கு, பிரிவு |
39 | உழவு | உழுதல் |
40 | உளவு | வேவு |
41 | உலவு | உலவுதல் |
42 | ஆன் | பசு |
43 | ஆண் | ஆண்மகன் |
44 | ஆனி | மாதத்தின் பெயர் |
45 | ஆணி | இரும்பாணி |
46 | என் | எனது |
47 | எண் | இலக்கம் |
48 | கனி | பழம் |
49 | கணி | கணக்கிடு |
50 | கான் | காடு |
51 | காண் | பார்த்தல் |
52 | நான் | தன்மை ஒருமை |
53 | நாண் | கயிறு |
54 | பானம் | பருகும் நீர் |
55 | பாணம் | அம்பு |
56 | வன்மை | திறமை |
57 | வண்மை | கொடை |
58 | அனைத்து | எல்லாம் |
59 | அணைத்து | தழுவி |
60 | பனி | குளிர் |
61 | பணி | தொழில் |
62 | மனம் | உள்ளம் |
63 | மணம் | வாசனை |
64 | தினை | தானியம் |
65 | திணை | ஒழுக்கம் |
66 | கரை | ஓரம் |
67 | கறை | குற்றம் |
68 | மரித்தல் | இறத்தல் |
69 | மறித்தல் | தடுத்தல் |
70 | விரல் | கைவிரல் |
71 | விறல் | வலிமை |
72 | வரை | மலை, கீறு |
73 | வறை | வறுவல் |
74 | அரை | அரைத்தல் |
75 | அறை | வீட்டின் ஒரு பகுதி (Room) |
76 | கிரி | மலை |
77 | கிறி | பொய் |
Comments
Post a Comment