தமிழ் தேர்வு - 04
கீழே உள்ள Telegram Channel ல் இணைந்து இலவச தேர்வுகள், Daily Questions, Study Materials - பெற்று பயன்பெறவும்.
Click one by one all answer and finally submit button , you can see the answers !
1. எல்லோரிடமும் எவ்வாறு பழகுவது பண்புடைமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
A) மகிழ்ச்சியாக
B) எளிமையாக
C) பழமையாக
D) மரியாதையாக
2. பெரியாரைக் துணைக்கோடலின் பயன் என்ற வார்த்தைக்கு பொருத்தமான திருக்குறளின் பொருளைக் காண்க?
A) அறிவிற் சிறந்த பெரியோரைச் சார்ந்து நடக்க வல்லாருக்குப் பகைவர் செய்யக்கூடிய தீங்கு வராது
B) அறநெறியை அறிந்து அறிவில் தெளிந்த முதிர்ச்சியுடையோர் நட்பினை ஆராய்ந்தறிந்து ஏற்றுக் கொள்வீராக
C) அறிவறிந்த பெரியோரைப் போற்றி உறவாகக் கொள்ளுதலே ஒருவர் பெறவேண்டிய அரிய பேறுகளுள் எல்லாம் அரிய பேறாகும்
D) நல்லவர் ஒருவரின் நட்பைக் கைவிடுவது பலரைப் பகைத்துக் கொள்வதனை விடப் பன்மடங்கு தீமை உடையதாகும்
3. என்பும் உரியர் பிறர்க்கு என்று வள்ளுவர் யாரை குறிபிடுகிறார்?
A) மாண்புடையார்
B) பண்புடையார்
C) அன்புடையார்
D) அறிவுடையார்
"4. குற்றம் கண்ட இடத்து இடித்துத் திருத்தம் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர்கள் இல்லை தானே கெட்டழிவான்" என்ற பொருளைத் தரும் வள்ளுவரின் திருக்குறளைக் காண்க?
A) பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்
B) சூழ்வார்கண் ணாக ஒழுகலான் ஸ்ரீமன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
C) இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்
D) இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர்
5. "அறம்போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லா தவர்" – திருவள்ளுவர் மக்கள் பண்பு இல்லாதவரை எதனோடு ஒப்பிடுகிறார்?
A) அறம்
B) அரம்
C) மரம்
D) தாவரம்
6. வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க – ‘பொறு’
A) பொறுத்தவர்
B) பொறுத்தல்
C) பொறுத்து
D) பொறுத்தார்
7. பொருந்தாத இணையினை தேர்ந்தெடுக்க
A) நாட்டுப்பற்று – Patriotism
B) இலக்கியம் – Literature
C) கலைக்கூடம் – Red gallery
D) மெய்யுணர்வு – Knowledge of Reality
8. காரணப்பெயரை தேர்வு செய்க ?
A) வளையல்
B) சுவர்
C) மரம்
D) யானை
9. கயல் பானை ___________ கற்றுக் கொண்டாள்
A) உருவாக்க
B) வனைய
C) படைக்க
D) செய்ய
10. கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரியானது என்று வரையறு?
A) செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் ஜி. யு. போப் 1829ஆம் ஆண்டில் தென்னிந்தியாவுக்கு வந்தார்.
B) ஐரோப்பியர், ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதற்குரிய நூல் ஒன்றை எழுதினார்.
C) ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை, தமிழில் எழுதிப் பதிப்பத்தார்.
D) எண்பது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் செய்த பெரியார் ஜி. யு. போப் ஆவார்.
11. பூவின் ஏழு நிலைகளை முறையாக வரிசைப்படுத்துக?
A) மலர், அலர், வீ, செம்மல், முகை, மொட்டு, அரும்பு
B) அரும்பு, மொட்டு, அலர், மலர், முகை, வீ, செம்மல்
C) அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
D) அரும்பு, முகை, மொட்டு, மலர், அலர், வீ, செம்மல்
12. தைரியநாதர் என அழைக்கப்படுபவர் யார்?
A) கால்டுவெல்
B) ஜி. யு. போப்
C) மஸ்தான் சாகிபு
D) வீரமாமுனிவர்
13. ஜி. யு. போப் திருநெல்வேலியில் பணியாற்றிய காலம்?
A) 1822-1829
B) 1842-1849
C) 1832-1839
D) 1852-1859
14. கிறித்துவிற்குமுன் தோன்றி கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
A) சூசையப்பர்
B) திருமுழுக்கு யோவான்
C) யோசேப்
D) எலிசபெத்
15. உடல் நோய்க்கு ___________ தேவை
A) ஔடதம்
B) இனிப்பு
C) உணவு
D) உடை
16. வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க : “பாடு”
A) பாடினான்
B) பாடுதல்
C) பாடினேன்
D) பாடியவன்
17. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு” – இக்குறளில் திருவள்ளுவர் பண்பாளரின் குறிப்பிடும் இரண்டு எவை..?
A) அன்பும் பண்பும்
B) அன்பும் உயர்ந்த குடியும்
C) பண்பும் உயர்ந்த குடியும்
D) அன்பும் அரவணைப்பும்
18. நடு – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
A) நட்டான்
B) நடுதல்
C) நட்ட
D) நட்டு
19. வரைதல் – என்னும் சொல்லின் வேர்ச்சொல்லை தேர்வு செய்க.
A) வரைந்தான்
B) வருகிறான்
C) வரை
D) வரைதல்
20. ஓடு என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத் தொடர் எது?
A) அருணா ஓடினாள்
B) ஓடிய அருணா
C) ஓடி வந்தாள்
D) அருணாவிற்காக ஓடினாள்
21. இயைந்தவர்- இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A) இயைந்த
B) இயை
C) இயைந்து
D) இயைதல
22. பெறு என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
A) பெற்றான்
B) பெறுவான்
C) பெறுகிறான்
D) பெறுபவன்
23. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை ______ தேர்ந்து கொளல் விடுபட்ட சீர்களை நிரப்புக.
A) திறனுடன்
B) செயலறிந்து
C) திறனறிந்து
D) உடனிருந்து
24. வா’ என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A) வந்தவர்
B) வந்து
C) வந்த
D) வந்தான்
25. உருவாக்கல்: ‘ஒறுத்தல்’
வினையாலணையும் பெயர் காண்க
A) ஒறுத்தினேன்
B) பொறுத்தல்
C) ஒன்றுதல்
D) ஒறுத்தார்
26. திராவிடம் என்ற சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் ?
A) பாரதியார்
B) ஜி யு போப்
C) வீரமாமுனிவர்
D) கால்டுவெல்
27. அழிந்து வரும் பண்டைய தமிழ் ஊலை சுவடியை புதுப்பித்து பாதுகாக்கும் அமைப்பு எது ?
A) ISRO
B) UNO
C) UNESCO
D) WHO
28. செம்மொழிக்கான கூறுகளில் கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது ?
A) இலக்கிய இலக்கண வளம்
B) தனித்தன்மையின்மை
C) பண்பாட்டு வளம்
D) தொன்மை
29. எளிதில் பேசவும் எளிதில் பாடவும் இயற்கையாக அமைந்த மொழி தமிழ் என்று கூறியவர் ?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) மகாத்மா காந்தி
D) வள்ளலார்
30. ஓடு என்ற வேர்ச்சொல்லின் வினையெச்சத் தொடர் எது?
A) அருணா ஓடினாள்
B) ஓடிய அருணா
C) ஓடி வந்தாள்
D) அருணாவிற்காக ஓடினாள்
Question 31: தமிழ் மொழி அழகான சித்திரவேலை பாட அமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் – என்று கூறியவர் யார் ?
A) வீரமாமுனிவர்
B) ஜி யு போப்
C) கிரெல்
D) பாரதியார்
Question 32: குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றியதாக கூறும் நூல் எது ?
A) தண்டியலங்காரம்
B) திருக்குறள்
C) சிலப்பதிகாரம்
D) தொல்காப்பியம்
Question 33: அம்மை அப்பன் ___________ நாட்டு தமிழ்ச்சொல்
A) பாண்டிய நாடு
B) சோழ நாடு
C) சேர நாடு
D) நாஞ்சில் நாடு
Question 34: இச்சங்கத்தில் – தமிழ் முத்தமிழ் என வழங்கப்பட்டது ?
A) 1
B) 3
C) 2
D) 4
Question 35: எல்லா சொல்லும் பொருளும் குறித்தனவே ____________ - இது எந்த நூல் செய்தி ?
A) திருக்குறள்
B) தொல்காப்பியம்
C) சிலப்பதிகாரம்
D) அகத்தியம்
Question 36: தமிழில் எந்த பெயர் மிகவும் குறைவு ?
A) காரணப்பெயர்
B) பொதுப்பெயர்
C) இடுகுறி பெயர்
D) காலப்பெயர்
Question 37: திருத்திய பண்பும் சீத்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி – தமிழ் செம்மொழியாம் என்று கூறியவர் யார் ?
A) பாரதிதாசன்
B) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
C) பரிதிமாற் கலைஞர்
D) பாரதியார்
Question 38: செவ்வியல் தன்மை கொண்டது செம்மொழி என்று கூறியவர் யார் ?
A) பாவாணர்
B) திருவள்ளுவர்
C) ஜி யு போப்
D) பரிதிமாற் கலைஞர்
Question 39: முதல் , இடை, தமிழ்ச் சங்கம் தோன்றிய இடம் ?
A) கேரளா
B) தஞ்சை
C) மதுரை
D) குமரிக்கண்டம்
Question 40: தடை தமிழ்ச்சங்கம் தோன்றிய இடம் ?
A) குமரிக்கண்டம்
B) கன்னியாகுமரி
C) மதுரை
D) காஞ்சிபுரம்
41. என்றுமுள தென் தமிழ் – என்று கூறியவர் ?
A) கம்பர்
B) பாரதியார்
C) திருவள்ளுவர்
D) இளங்கோவடிகள்
42. தமிழ் _________ மொழிகளுக்கு வேர் சொற்களைத் தருகிறது ?
A) 4,800
B) 6,800
C) 180
D) 2,800
43. தமிழ் _________ மொழிகளுக்கு உறவு பெயரினை தருகிறது ?
A) 180
B) 680
C) 569
D) 980
44. சங்க இலக்கிய அடிகள் ?
A) 26, 750
B) 26, 150
C) 26, 450
D) 26,350
45. தமிழ் மிகவும் பண்பட்ட மொழி என்றும், அது தனக்கே உரிய இலக்கண செல்வத்தை பெற்றுள்ளது - என்று கூறியவர் ?
A) கமல் சுவலபில்
B) கம்பர்
C) மார்க்சு முல்லர்
D) அகத்தியர்
46. ஒரு மொழிக்குத் தேவையான ஒலிகள் ?
A) 36
B) 35
C) 34
D) 33
47. அகர வரிசைப்படி அமைந்த விடையைத் தேர்க:
A) அம்மா, அப்பா, அண்ணி, அங்காடி, அன்னம்
B) அப்பா, அம்மா, அன்னம், அண்ணி, அங்காடி
C) அங்காடி, அண்ணி, அப்பா, அம்மா, அன்னம்
D) அங்காடி, அப்பா, அம்மா, அண்ணி, அன்னம்
48. அகரவரிசைப்படுத்துக
மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம், மாவிலை. மௌனம், மொழிபெயர்ப்பு,
A) மனத்துயர், மாவிலை, மீமிசை, முந்நீர், மேடுபள்ளம், மொழிபெயர்ப்பு, மௌனம்
B) மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம், மாவிலை, மௌனம், மொழிபெயர்ப்பு
C) மொழிபெயர்ப்பு, மாவிலை, மௌனம், மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம்
D) மேடுபள்ளம், மனத்துயர், முந்நீர், மொழிபெயர்ப்பு, மாவிலை, மெளனம், மீமிசை
49. அகரவரிசைப் படி சொற்களை அமைக்க
A) கனல், கிளி, குரங்கு, கெண்டை, கொள்கை, கோட்டான்
B) கொள்கை, கனல், கெண்டை, கிளி, குரங்கு, கோட்டான்
C) கனல், கிளி, கெண்டை, குரங்கு, கொள்கை, கோட்டான்
D) கிளி, கெண்டை, குரங்கு, கனல், கோட்டான், கொள்கை
50. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
A) சித்தர், சீர்வரிசை, சூரியன், சேவடி
B) சித்தர், சூரியன், சீர்வரிசை,சேவடி
C) சேவடி, சூரியன், சித்தர், சீர்வரிசை
D) சீர்வரிசை, சேவடி, சூரியன், சித்தர்
51. அகரவரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்வு செய்க.
A) திண்ணை, தங்கம், துணை, தெரு, தூண்
B) சிறுவன், சாப்பாடு, சலிப்பு, செய்தி, சோளம்
C) அண்டம், கடமை, ஆற்றல், ஓவியம், காதல்
D) சலிப்பு, சாப்பாடு, சிறுவன், செய்தி, சோளம்
52. பாரதியாரின் இயற்பெயர்
A) சுப்புரத்தினம்
B) சுப்பிரமணியன்
C) சுப்பிரமணியதாசன்
D) சுப்பிரமணி
53. விராடபுரம்’ என்ற மரூஉப் பெயர்க் கொண்ட ஊரைக் காண்க
A) திருப்பூர்
B) பெரம்பலூர்
C) வீர நாராயணபுரம்
D) வரகுண மங்கை
54. மரூஉப் பெயர் : பொருத்தமில்லாத இணையைத் தேர்க
A) கயப்பாக்கம் – கல்பாக்கம்
B) குன்னத்தூர் – குன்றத்தூர்
C) குன்னக்குடி – குன்றக்குடி
D) ஆரூர் – ஆத்தூர்
55. ஊர்ப்பெயரின் மரூஉவை அறிந்து பொருந்தா இணையையக் கண்டறிக
A) புதுச்சேரி – புதுவை
B) புதுக்கோட்டை – புதுமை
C) கும்பகோணம் – குடந்தை
D) நாகப்பட்டினம் – நாகை
56. ஊர்ப்பெயரின் மரூஉவை அறிந்து பொருந்தமான இணையையக் கண்டறிக
A) மயிலாடுதுறை – மாயதுறை
B) திருஆனைக்கா – திருவானைக்கா
C) வேங்கடாசலம் – திருக்கழுக்குன்றம்
D) வேதாசலம் - திருப்பதி
57. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக
A) திருச்சிராப்பள்ளி
B) திருப்பள்ளி
C) திருவைப்பள்ளி
D) திருச்சி
58. பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்” எனப் பாடியவர்
A) நாமக்கல் கவிஞர்
B) புரட்சிக் கவிஞர்
C) மக்கள் கவிஞர்
D) கார்மேகக் கவிஞர்
59. துற என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எழுதுக.
A) துறப்ப
B) துறந்து
C) துறத்தல்
D) துறந்தான்
60. செல் என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்வு செய்க.
A) சென்ற
B) சென்று
C) சென்றவன்
D) சென்றான்
61. வந்த – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A) வரு
B) வருக
C) வந்து
D) வா
62. வினைமுற்றை தேர்வு செய்க
A) படி
B) படித்த
C) படித்து
D) படித்தான்
63. எடு’ என்ற வேர்ச்சொல்லை விளையாலணையும் பெயராக்குக.
A) எடுத்த
B) எடுத்தவன்
C) எடுத்தது
D) எடுத்த
64. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக: “புதுச்சேரி”
A) புதுமுகனை
B) புதுவை
C) புதுகை
D) பாண்டிச்சேரி
65. வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க ‘பொறு’
A) பொறுத்தவர்
B) பொறுத்தல்
C) பொறுத்து
D) பொறுத்தார்
66. எதிர் + ஒலிக்க’ : சேர்த்து எழுதுக
A) எதிரலிக்க
B) எதிர்ஒலிக்க
C) எதிரொலிக்க
D) எதிர்ரொலிக்க
67. கீழ் உள்ள திருக்குறளில் விடுபட்ட இடத்தை நிரப்புக : “ அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றா ............
A) அறம்
B) விடல்
C) கடை
D) தலை
68. வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் கூறு: வாழ்
A) வாழ்ந்த
B) வாழ்ந்து
C) வாழ்க்கை
D) வாழா
69. எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” – என மனமுருகிப் பாடியவர்
A) குணங்குடி மஸ்தான் சாகிபு
B) தாயுமானவர்
C) கவிமணி தேசிக விநாயகனார்
D) குமரகுருபரர்
70. பின்வருவனவற்றுள் கண்ணி எனும் சொல்லின் பொருள்
A) இரண்டு சீர்களைக் கொண்ட பாடல்வகை
B) இளமையான பெண்
C) இரண்டு அடிகளைக் கொண்ட பாடல் வகை
D) இளம் பெண்களால் பாடப்படும் ஒருவகைப் பாடல்
Question 71: கவிமணி எவ்வளவு காலம் பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
A) 36 ஆண்டுகள்
B) 28 ஆண்டுகள்
C) 36 மாதங்கள்
D) 28 மாதங்கள்
Question 72: மரபு பிழையற்றதை எடுத்து எழுதுக:
A) சோறு சாப்பிட்டான்
B) பால் குடித்தான்
C) அம்பு விட்டான்
D) கூடை முடைந்தான்
Question 73: யார் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிப்பதாக தாரா பாரதி கூறுகிறார்?
A) கம்பர்
B) காளிதாசர்
C) பாரதிதாசன்
D) பாரதியார்
Question 74: பின்வரும் நூல்களில் பதினென்கீழ்க்கணக்கு நூலை எழுதுக?
A) பதிற்றுபத்து
B) கலித்தொகை
C) திருக்குறள்
D) மலைபடுகடாம்
Question 75: தமிழில் உள்ள மொத்த ஒரெழுத்து ஒருமொழி சொல் ?
A) நாற்பத்து இரண்டு
B) நாற்பது
C) நாற்பத்தெட்டு
D) நாற்பத்தைந்து
Question 76: தமிழன் கண்டாய்” என்பது யாருடைய கூற்று?
A) திருஞானசம்பந்தர்
B) மாணிக்கவாசகர்
C) திருநாவுக்கரசர்
D) சுந்தரர்
Question 77: பாரதிதாசன் குறித்த கூற்றுகளில் கீழ்க்கண்ட எது ஒன்று தவறானது ?
A) பாவேந்தர் என போற்றப்படுபவர்
B) இவரின் இயற்பெயர் சுப்பிரமணியம்
C) பெண்கல்வி, கைம்பெண், மறுமணம் முதலிய கருத்துக்களை உள்வாங்கி பாடல்களைப் பாடியவர்
D) புரட்சிக்கவி என போற்றப்படும் இவர் பாரதியார் கவிதைகள் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார்
Question 78: தமிழ்மொழிப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் ஜி. யு. போப் எழுதிய நூல்கள்?
A) இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்லியல் ஆய்வு
B) இந்தியன் சந்திரிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு
C) இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு
D) இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொன்மைகளின் ஆய்வு
Question 79: தமிழின் முதல் அகராதி
A) தொன்னூல் விளக்கம்
B) நன்னூல்
C) சொல்லகராதி
D) சதுரகராதி
Question 80: ஓரெழுத்து ஒரு மொழிக்குறிய பொருளறிக : ‘மோ’
A) அஞ்சாமை
B) அழைத்தல்
C) முகத்தல்
D) மூப்பு
Question 81: ஓ – இந்த ஓரெழுத்து ஒரு மொழி தரும் பொருள்.
A) மதில்மேல் நிற்கும் பூனை
B) தனியே செல்லும் யானை
C) நல்லோர் வருகை
D) மதகு நீர் தாங்கும் பலகை
Question 82: கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
A) தேம்பாவணியில் அறம், பொருள், வீடு மட்டுமே பாடப்பட்டுள்ளன. இன்பம் பாடப்பெறவில்லை.
B) தேம்பாவணியை ‘புறநிலக் காப்பியம்’ என்று தன்னை, புறநிலக் காப்பியன் என்னும் தொன்னூலில் வீரமாமுனிவர் குறிப்பிடுகிறார்.
C) சீறாப்புராணத்தில் மூன்று காண்டங்களும், 92 படலங்களும் உள்ளன.
D) அரபுச்சொற்கள், அரபுப்பெயர்கள் எஞ்ஞான்றும் இடம் பெறாமல் சீறாப்புராணத்தினை நற்றமிழால் யாத்த சிறம் போற்றுதற்குரியது
Question 83: ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல் பல கொண்டதுவாம்” எனத் தமிழைப் போற்றிப் பாடியவர்?
A) பெருஞ்சித்திரனார்
B) காசி ஆனந்தன்
C) பாரதிதாசன்
D) வாணிதாசன்
Question 84: இளங்கோவடிகள் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?
A) கி.மு. 2 நூற்றாண்டு
B) கி.பி. 3 நூற்றாண்டு
C) கி.பி. 2 நூற்றாண்டு
D) கி.மு. 3 நூற்றாண்டு
Question 85: ஐம்பெருங்காப்பியங்களில் அழைக்கப்படுகிறது?
A) சிலப்பதிகாரம், மணிமேகலை
B) மணிமேகலை, குண்டலகேசி
C) சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி
D) வளையாபதி, சீவகசிந்தாமணி
Question 86: கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரியானது என்று வரையறு?
A) செந்தமிழ்ச் செம்மல் டாக்டர் ஜி. யு. போப் 1829ஆம் ஆண்டில் தென்னிந்தியாவுக்கு வந்தார்.
B) ஐரோப்பியர், ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதற்குரிய நூல் ஒன்றை எழுதினார்.
C) ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை, தமிழில் எழுதிப் பதிப்பத்தார்.
D) எண்பது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் செய்த பெரியார் ஜி. யு. போப் ஆவார்.
Question 87: பின்வருவனவற்றுள் தென்திராவிட மொழிகளுள் பொருந்தாத ஒன்று
A) மலையாளம்
B) தெலுங்கு
C) கன்னடம்
D) ஆங்கிலம்
Question 88: கீழ்க்கண்ட பொருத்தமில்லாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
A) குடைவரைக் கோவில்
B) தஞ்சை பெரிய கோவில்
C) ஒற்றைக் கல் கோயில்கள்
D) புடைப்புச் சிற்பங்கள்
Question 89: ஆராயும் அறிவு உடையவர்கள் சொற்களை பேசமாட்டார்கள்
A) தீய
B) விலையற்ற
C) பயன்தராத
D) பிறர் மனதைத் துன்புறுத்தும்
Question 90: கீழ்க்கண்ட பிரித்து எழுதுகளில் சரியானதை சுட்டிக் காட்டுக
A) பொறையுடைமை – பொறை + யுடைமை
B) நன்றியறிதல் – நன்று + அறிதல்
C) அறிவுடைமை – அறிவு + உடைமை
D) இவையெட்டும் – இ + எட்டும்
Question 91: கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் அறிக: “ADULTERATION”
A) தொழில் முனைவோர்
B) கலப்படம்
C) பாரம்பரியம்
D) பயணப்படகுகள்
Question 92: மக்கள் கவிஞர் என அனைவராலும் பாராட்டப்பெறுபவர்
A) பெருஞ்சித்திரனார்
B) கண்ணதாசன்
C) உடுமலை நாராயணக்கவி
D) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார்
Question 93: மூதுரை’ என்பதன் பொருள் என்ன?
A) இளையோர் கூறும் அறிவுரை
B) அனுபவம் உள்ளவர் கூறும் அறிவுரை
C) அறிவுடையோர் கூறும் அறிவுரை
D) மூத்தோர் கூறும் அறிவுரை
Question 94: மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்”- எனும் இப்பாடல் வரி இடம்பெறும் நூல்?
A) துன்பம் வெல்லும் கல்வி
B) காணி நிலம்
C) சிலப்பதிகாரம்
D) மூதுரை
Question 95: வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகள் உருவாகக் காரணமாக இருந்தவை
A) வெவ்வேறு ஒலிகள் மற்றும் சைகைகள்
B) இட அமைப்பும் இயற்கை அமைப்பும்
C) எண்ணங்களின் வெளிப்பாடு
D) பிறப்பு, தொடர்பு, அமைப்பு மற்றும் உறவு
Question 96: மயங்கொலி எழுத்துகள் மொத்தம் எத்தனை உள்ளது?
A) ஆறு
B) ஏழு
C) எட்டு
D) ஒன்பது
Question 97: ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக : “கும்பகோணம்”
A) குடந்தை
B) கும்பை
C) குமுளி
D) குரும்பூர்
Question 98: ஆற்றூர் பேச்சு வழக்கில் ____ என மருவியுள்ளது
A) ஆம்பூர்
B) அரூர்
C) அரசு
D) ஆத்தூர்
Question 99: எல்லோரிடமும் எவ்வாறு பழகுவது பண்புடைமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு என வள்ளுவர் குறிப்பிடுகிறார்
A) மகிழ்ச்சியாக
B) எளிமையாக
C) பழமையாக
D) மரியாதையாக
Question 100: பசிப்பிணி போக்கிய மருத்துவர் இவ்வரி யாருக்கு பொருந்தும்
A) நாமக்கல்லார்
B) வள்ளலார்
C) மணிமேகலை
D) தாராபாரதி
Comments
Post a Comment