முன் செல்லடா | Mun Sellada Song Lyrics |

குழு :  முன் செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை, தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை... ஓகே !

BGM...

ஆண் : உளி முத்தம் வைத்ததும் சிதறும் அப்பாறை துளிகள் அதற்காக கண்ணீர் சிந்தாது சிற்பத்தின் விழிகள் !!!

கருமேகம் முட்டிக் கொட்டும் அத்தண்ணீர் பொறிகள் அவை விழுந்தால் பற்றிக்கொள்ளட்டும் உன் நெஞ்சின் திரிகள் !!!

குழு :  முன் செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை, தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை... 

ஆண் : ஆயிரம் தடைகளை உன் முன்னே காலம் இன்று குவித்தாலும் ஆயிரம் பொய்களை ஒன்றாய் சேர்ந்து உன்னை பின்னால் இழுத்தாலும்,

முன் செல்லடா ஓகே முன் செல்லடா முன் செல்லடா யே முன் செல்லடா !!!

குழு :  முன் செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை, தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை... 

BGM...

ஆண் : தூரம் நின்று யோசித்தால் குட்டை கூட ஆழம்தான் நீ உள்ளே சென்று நேசித்தால் அக்கடலும் உந்தன் தோழன்தான்

விதிமேல் பழியைப் போடாமல் நீ உன்மேல் பழியைப் போடு ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்க்கையின் காரணம் தேடு !!!

BGM...

ஆண் : முன் செல்லடா 

குழு :  முன் செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை, தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை...

ஆண் : முன் செல்லடா 

குழு :  முன் செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை, தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை... !!!

________________________________________________________________________________________________________________________________________________

If you have any questions Or feedback in this ,

Contact Email - INFOWORLD62.CARE@GMAIL.COM

Regards  - Info world Tamil

________________________________________________________________________________________________________________________________________________

Movie Name Manithan
Song Name Mun Sellada
Singer Anirudh Ravichander & ADK
Music Santhosh Narayanan
Lyrics Karky
Director I Ahmed
Starring Udhayanidhi Stalin, Hansika Motwani
Producer Udhayanidhi Stalin
Studio Red Giant Movies
Music Label Sony Music Entertainment India Pvt. Ltd.

Comments