தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்கள் | Best Tourist Place in Tamil Nadu (India) | Tourist place | Tourism Tamil Nadu
Kollimalai | கொல்லிமலை :
தமிழகத்தில் உள்ள குளிர்ச்சியான இடங்களில் ஒன்று கொல்லிமலை. அன்னாசி, பலாப்பழம் போன்றவை இங்கு பெரும்பாலும் விளைவிக்கப்படுகிறது. 1000-2000 ரூபாயை கொண்டு இந்த பகுதியை ஒரு நாளில் சுற்றி பார்க்க முடியும். மேலும் இரண்டு, மூன்று நாட்கள் இங்கேயே தங்கி சுற்றிப் பார்ப்பதற்கான வசதிகளும் இங்கு உள்ளது. தேவையான அறை வசதிகளும் இங்கு உள்ளது. இது கிழக்குத் தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியாக உள்ள ஒரு மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 4000-4600
அடி உயரத்தில் உள்ளது. இது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த மலையை அடைவதற்கு நாமக்கல் மாவட்டத்திலிருந்து பேருந்து வசதியும் உண்டு. மேலும் தனியாக வாகனத்திலும் இந்த மலைக்குச் செல்லலாம். கொல்லிமலை மொத்தமாக 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. இந்த மலையை ஏறத் தொடங்கிய சில மணி நேரத்திலேயே ''ஆகாயகங்கை'' என்ற பகுதியை நம்மால் பார்க்க முடியும். இதற்கு செல்ல போதுமான படிக்கட்டு வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் அருமையாக இந்த நீர்வீழ்ச்சி அமைந்திருக்கும். இந்த அருவியை தொடர்ந்து ''சிற்றருவி'' என்ற அறிவியும் நம்மால் பார்க்க முடியும். இதனைத் தொடர்ந்து சற்று தூரம் பயணம் செய்தால் ''Valappurnadu View point'' என்ற பகுதியை அடையலாம். இதனை கடந்து சென்றால் சில கோவில்களையும் நம்மால் பார்க்க முடியும். அதனைத் தொடர்ந்து ''நம்ம அருவி'' என்ற அருவியை பார்க்கலாம். இதனைத் தொடர்ந்து நம்மால் "மாசிலா நீர்வீழ்ச்சி" என்று நீர்வீழ்ச்சி காண முடியும். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் விரும்பும் நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ''மாசி பெரியசாமி கோயில்" இன்று கோவில் உள்ளது. இதனை தொடர்ந்து " Seek view point " என்ற அழகான பகுதியை அடையலாம். இங்கிருந்து மலைப் பகுதிகளை பார்ப்பது ஒரு தனி அனுபவமாக அமையும். இதனைத் தொடர்ந்து சற்று தூரம் பயணம் மேற்கொண்டால், "தாவரவியல் பூங்கா" மற்றும் "படகு இல்லம்" ஆகியவற்றை நம்மால் பார்க்க முடியும். இதனைத் தொடர்ந்து "சந்தன அருவி" என்ற அருவியையும் நம்மால் பார்க்க முடியும். அதை அடுத்த படியாகவே மேலும் ஒரு view point யை நம்மால் பார்க்க முடியும். இந்த கொல்லிமலையில் பல்வேறு சித்தர்கள் வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றனர். இங்கே "சித்தர் குகை" என்ற குகையும் உள்ளது. தமிழகத்தில் சுற்றிப் பார்ப்பதற்கு மிகவும் அருமையான பகுதிகளில் கொல்லிமலைய ஒன்று என்பது நிதர்சனமான உண்மையாகும்.
Kollimalai is one of the coolest places in Tamil Nadu. Pineapple and jackfruit are mostly grown here. With 1000-2000 rupees you can explore this area in a day. There are also facilities for sightseeing for two or three days. Necessary room facilities are also available here. It is a continuation of the Eastern Ghats. 4000-4600 above sea level feet high. It is located in Namakkal district of Tamil Nadu. There is also a bus facility from Namakkal district to reach this hill. You can also go to this hill by vehicle alone. Kollimalai has a total of 70 Kondi Needle Arches. After a few hours of climbing this mountain, we can see the area called "Aghaya Ganga". Adequate staircase facilities are also provided here. This waterfall is very beautiful. We can also see this waterfall known as ``small waterfall''. After this, if you travel a little further, you can reach the area called "Valappurnadu View point". If we pass this we can see some temples. After that you can see the waterfall called "Namma Aruvi". Following this we can see the waterfall called "Masila Falls". It is noteworthy that this is one of the waterfalls that most tourists prefer. Following this is the Masi Periyasamy Temple where the temple is today. Following this you can reach a beautiful area called "Seek view point". Viewing the hilly areas from here is a unique experience. If you travel a little further, you will find the "Botanical Garden" and the "Boat House". We can see the "Sandana Falls" and another view point. There is also a cave called "Chithar Cave" in Tamil Nadu Kollimalaya is a true reality.
அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள ஒரு குளிர்ச்சியான இடத்தைப் பற்றி பார்க்க போகிறோம். இந்தப் பகுதி சேலம் மாவட்டத்தில் உள்ளது. ஏற்காடு என்று இந்த பகுதி அழைக்கப்படுகிறது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5324 அடி உயரத்தில் உள்ளது. ஏற்காடு மலை உச்சியானது 20 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. ஏற்காட்டில் பல சிறிய நீர்வீழ்ச்சிகள், ஓடைகள், ஏரிகள், பசுமை நிறைந்த காப்பி மற்றும் தேயிலை தோட்டங்கள் என பல்வேறு பகுதிகள் உள்ளது. ஏற்காட்டில் முதல் பகுதியில் படகு இல்லம் இருக்கும். இதற்கான நுழைவு கட்டணமாக பத்து ரூபாய் வாங்குகின்றனர். மேலும் படகு சவாரிக்கு தனியாக பணம் வசூலிக்கப்படும். இதனைத் தொடர்ந்து சில விலங்குகளை கொண்டுள்ள ஒரு "சூழல் சுற்றுலா பூங்கா" என்ற பூங்காவை பார்க்க முடியும். இதற்கான நுழைவு கட்டணமும் பத்து ரூபாய். இதனைத் தொடர்ந்து கோடை காலங்களில் மலர்கண்காட்சி நடைபெறும் "அண்ணா பூங்காவை" நம்மால் பார்க்க முடியும். கோடைகாலத்தில் இந்த பகுதிக்கு சென்றால் இந்த கண்காட்சியை தவறாமல் பாருங்கள் . ஏற்காடு ஏரியிலிருந்து சற்று தொலைவில் போனால் மிகவும் புகழ்பெற்ற கிள்ளியூர் நீர் வீழ்ச்சி என்ற பகுதியை அடையலாம். இந்தப் பகுதி அனைவராலும் பார்க்க வேண்டிய முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். மிகவும் ரம்யமான சூழலில் இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் நீராடிவிட்டு சற்று தொலைவில் வந்தால் View Point யை நம்மால் பார்க்க முடியும். இங்கிருந்து இந்த பகுதியை பார்ப்பது ஒரு அழகிய சூழலாக இருக்கும். இந்தப் பகுதியை ரசித்து விட்டு அதன் அருகிலேயே பார்த்தால் ஒரு ரோஜா பூங்காவை பார்க்க முடியும். ஏற்காடு எரியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் pagoda view point யை பார்கலாம் இது ஏற்காட்டில் தவிர்க்க முடியாத பகுதிகளில் ஒன்றாகும். இந்த பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்றால் சேர்வராயன் கோயில் என்ற கோயிலை அடையலாம். இந்தப் பகுதியிலிருந்து செல்லச் செல்ல ஆங்காங்கே சில view point's உள்ளது. இயற்கையை விரும்புபவர்களுக்கு ஏற்காடு அருமையான பகுதியாக இருக்கும்.
Next we are going to see about a cool place in Tamil Nadu. This area is in Salem district. This area is called Yercaud. Yercaud is 5324 feet above sea level. Yercaud hill top has 20 Kondi needle bends. Yercaud is home to many small waterfalls, streams, lakes, lush green coffee and tea plantations. Yercaud will have a boathouse in the first area. They charge ten rupees as an entry fee. Also the boat ride will be charged separately. This is followed by an "eco tourism park" with some animals. The entry fee is ten rupees. Following this we can see "Anna Park" where the flower show is held during the summer season. If you visit this area during summer, do visit this exhibition. A little further from the Yercaud lake, one can reach the famous Killiyur water fall. This area is one of the important areas that everyone should visit. This area is located in a very pleasant environment. After swimming in this waterfall, we can see the View Point if we come a little far. Viewing this area from here is a beautiful environment. Admire this area and see a rose garden nearby. 5 kms from Yercaud Eri you can see pagoda view point which is one of the unmissable places in Yercaud. A kilometer away from this area, you can reach a temple called Servarayan Temple. There are some view point's here and there to go from this area. Yercaud is a wonderful place for nature lovers Yercaud is a wonderful place.
Thanjavur Periya Koil | தஞ்சை பெரிய கோவில் :
அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள மிகவும் பழமையான ஒரு சுற்றுலா தளத்தை பற்றி பார்ப்போம். 1003 மற்றும் 1010 CE க்கு இடையில் சோழப் பேரரசர் இராஜராஜனால் கட்டப்பட்ட இக்கோயில், சோழர் கால கங்கைகொண்ட சோழபுரம் கோவில் மற்றும் ஐராவதேஸ்வரர் கோவில் ஆகியவற்றுடன் " Great Living Chola Temples " எனப்படும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும். இந்த கோவில் பிரகதீஸ்வரர் கோயில் , அதைக் கட்டியவரால் ராஜராஜேஸ்வரம் என்றும், உள்நாட்டில் தஞ்சை பெரிய கோவில் ,தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் பெருவுடையார் கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது. இது தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிரானைட் கற்களால் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு மேலே உள்ள விமான கோபுரம் தென்னிந்தியாவின் மிக உயரமான ஒன்றாகும்.
இது 240.79 மீட்டர் (790.0 அடி) கிழக்கிலிருந்து மேற்காகவும், 121.92 மீட்டர் (400.0 அடி) வடக்கிலிருந்து தெற்காகவும் உள்ளது. பழமையான கட்டடக் கலைகளை விரும்புவர்களுக்கு இந்தப் பகுதி ஒரு சிறப்பான பகுதியாக அமையும். கோயில் கிழக்கு நோக்கி உள்ளது, ஒரு காலத்தில் அதைச் சுற்றி நீர் அகழி இருந்தது.கோவிலின் அடியில் சோழ சுவரோவியங்கள் கருவறையின் சுவர்களில் சுற்றிய பாதையில் உள்ளது.கோயில் சுவர்களில் தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. பிரதான கோவில் முழுவதும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதை உருவாக்க 1,30,000 டன்களுக்கும் அதிகமான கிரானைட் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிக்கு மதிய நேரத்தில் செல்வதை விட மாலை நேரத்தில் செல்வது மிகவும் அருமையான காட்சியாக இருக்கும். மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் இந்த கோவிலின் காட்சி மிக அருமையாக இருக்கும். இந்த கோவிலுக்கு அருகிலேயே பல தங்கும் விடுதிகளும் உள்ளது. இங்கு தங்கி இந்தக் கோவிலின் மாலை நேர காட்சியை பார்க்க பல்வேறு சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.
Next let's look at one of the oldest tourist sites in Tamil Nadu. Built by the Chola Emperor Rajaraja between 1003 and 1010 CE, the temple is part of the UNESCO World Heritage Site known as "Great Living Chola Temples" along with the Chola-era Gangaikonda Cholapuram Temple and Airavatheswarar Temple. The temple is known as Pragatheeswarar Temple, Rajarajeswaram after its builder, and locally known as Thanjavur Periya Koil, Thanjavur Periya Koil and Peruvudayar Temple. It is located in Thanjavur district of Tamil Nadu. Built of granite, the Vimana Gopuram above the temple is one of the tallest in South India. It is 240.79 meters (790.0 ft) from east to west and 121.92 meters (400.0 ft) from north to south. For lovers of ancient architecture, this area is a great place to visit. The temple faces east and once had a moat around it. Beneath the temple there are Chola murals in a path around the walls of the sanctum sanctorum. There are numerous inscriptions in Tamil and Granth script on the temple walls. The entire main temple is built of granite stones. More than 1,30,000 tonnes of granite is said to have been used to make it. Visiting this area in the evening is a much more beautiful sight than in the afternoon. The view of this temple is very beautiful in the evening when the sun sets. There are many hostels near this temple. Many tourists like to stay here and see the evening view of this temple.
Hogenakkal :
அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியான Hogenakkal யை பற்றி பார்க்க போகிறோம். இது தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது. இது தமிழ்நாடு கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு தமிழ்நாட்டில் வழியாக மட்டுமில்லாமல் கர்நாடக எல்லை வழியாகவும் நம்மால் செல்ல முடியும். இந்தப் பகுதியை அடைந்தவுடன் பல்வேறு சிறு சிறு உணவுப் பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கும். குறிப்பாக மீன் பொருட்கள் மிக அதிகமாக கிடைக்கும். மேலும் இந்தப் பகுதியில் படகு சவாரி உள்ளது. இந்த பகுதியில் படகு சவாரி மிக அருமையாக இருக்கும். படகு வழியாகவே மெயின் அருவியை சென்றடையலாம். அதன் அருகாமையிலேயே தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சற்று தொலைவில் மணல் திட்டு என்ற பகுதியை அடையலாம் . இந்தப் பகுதி தான் தமிழக கர்நாடக எல்லையாகும். இதற்கிடையே இடையில் அங்கங்கே பல்வேறு நீர்வீழ்ச்சிகளையும் நம்மால் பார்க்க முடியும். ஆனால் அவையெல்லாம் சற்று சிறியதாகவே இருக்கும். ஒரு நாள் Trip செய்ய விரும்புபவர்களுக்கு இந்த பகுதி ஒரு சிறந்த பகுதியாக அமையும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. அதே சமயம் இந்தப் பகுதியில் சில சமயம் அதிகப்படியான நீர்வரத்து ஏற்படும், அந்த சமயங்களில் இங்கு செல்ல அனுமதிப்பதில்லை. இந்த பகுதிக்கு செல்ல விரும்புவர்கள் முறையாக அறிந்து விட்டு இந்த பகுதிக்கு செல்லவும்.
Next we are going to see Hogenakkal, a waterfall in Tamil Nadu. It is located in Dharmapuri district in Tamil Nadu. It is located on the border of Tamil Nadu and Karnataka. We can go to this area not only through Tamil Nadu but also through the Karnataka border. Once you reach this area, there are various small food stalls. Especially fish products are available in abundance. Also boating is available in this area. Boating in this area is very nice. The main falls can be reached only by boat. A suspension bridge is located near it. After this, you can reach the area called sand dune at a little distance. This area is the Tamil Nadu Karnataka border. In between we can see various waterfalls here and there. But all of them are quite small. There is no doubt that this area is a great place for day trippers. At the same time, there are times when there is excessive water flow in this area, and in such cases it is not allowed to go here. Those who want to go to this area should know properly and go to this area.
________________________________________________________________________________________________________________________________________________
If you have any questions Or feedback in this Article,
Contact Email -INFOWORLD62.CARE@GMAIL.COM
Regards - Info world Tamil
This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal
Comments
Post a Comment